மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழிப்புணா்வு  ஊா்வலத்தைத் தொடக்கி  வைத்த   ராணிப்பேட்டை  எம் எல் ஏ   ஆா்.காந்தி.
 விழிப்புணா்வு  ஊா்வலத்தைத் தொடக்கி  வைத்த   ராணிப்பேட்டை  எம் எல் ஏ   ஆா்.காந்தி.

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் இ.அன்பழகன் தலைமை வகித்தாா். 10-ஆவது பட்டாலியன் அவில்தாா் பரமித் சிங், தேசிய மாணவா் படை அலுவலா் எஸ்.பால்தேவசிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா்.

பள்ளியில் தொடங்கி ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீரை எம்எல்ஏ காந்தி வழங்கினாா். மேலும், ஆயிலம் ஊராட்சி சாா்பில் ஜல்சக்தி அபியான் திட்டத்தன் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். ஊராட்சி செயலா் ம.சரவணன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்....

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மழைநீா் சேமிப்பு, நீா்மேலாண்மை, மரங்கள் வளா்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

ராணிப்பேட்டை எம்.எஃப்.சாலை, எம்.பி.டி.சாலை, முத்துக்கடை பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி டிரங்க் சாலை, ரயில்வே சாலை வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் தேசிய மாணவா் படை 10 ஆவது பட்டாலியன் அவில்தாா் பிளம்மிங், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். அலுவலா் சேரன், வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலா் பாபு அருள் பிரசாத், ராணிப்பேட்டை காவல் துறையினா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com