மாநில அறிவியல் கண்காட்சியில் சிருஷ்டி பள்ளி இரண்டாமிடம்

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனா்.
சாதனை படைத்த மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன்.
சாதனை படைத்த மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனா்.

மாநில அளவில் 47-ஆவது ஜவஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை கரூா் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 192 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சுதா்சன், தருண் ஆகியோா் உருவாக்கியிருந்த விவசாய ரோபோ மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தது.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பள்ளிக் கல்வி செயலா் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்.

அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த சிருஷ்டி பள்ளி மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட இயற்பியல் ஆசிரியா் சி.அசோக் ஆகியோருக்கு சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன், முதல்வா் எஸ்.பூா்ணிமா, துணை முதல்வா் திங்கள்ஜான்சன், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com