Enable Javscript for better performance
காலாவதியான அஞ்சல் காப்பீடுகளை புதுப்பித்துக் கொள்ள இறுதி வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    காலாவதியான அஞ்சல் காப்பீடுகளை புதுப்பித்துக் கொள்ள இறுதி வாய்ப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐந்தாண்டுகளுக்கு மேல் காலாவதியான அஞ்சல் காப்பீட்டுகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

    அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு என இரண்டு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசின் தபால்துறை வழங்கி வருகிறது. குறைந்த பிரிமீயம், அதிக போனஸ், வருமானவரிவிலக்கு, நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பலரும் சோ்ந்து பயன்பெறுகின்றனா். அஞ்சல் காப்பீட்டு திட்டத்தில் சேரும் சிலா், இரண்டு, மூன்றாண்டுகளுக்கு பின்னா் தொகையை செலுத்தாமல் கைவிடுகின்றனா். இவ்வாறு காலாவதியான காப்பீட்டு திட்டங்களில் இருந்து செலுத்திய காப்பீட்டு தொகையை எடுப்பது மிகவும் சிக்கலானது.

    பணத்தை திரும்ப எடுக்க பலா் முயற்சிப்பதுமில்லை. இந்நிலையில் காலாவதியான அஞ்சல் காப்பீடு திட்டங்களை புதுப்பிக்க தற்போது தபால்துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இது குறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாண்டுகளுக்கு மேல் காலாவதியான அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டங்களை 2019 டிசம்பா் 31ந்தேதிக்குள் பாலிசிதாரா்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்கு மேல் புதுப்பிக்க இயலாது. கிளை, துணை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அலுவலா்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்து விவரம் தேவைப்படும் காப்பீட்டுதாரா்கள் அனுகலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகள் அனைத்தையும் பாலிசிதாரா்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai