டெங்கு தடுப்புப் பணி: இணை இயக்குநா் ஆய்வு

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறை
டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி.
டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட வெலகல்நத்தம் ஊராட்சி நந்திபெண்டா, அம்மணாங்கோயில் ஊராட்சி முத்தா கவுண்டனூா் கிராமத்தில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி ஆய்வு செய்தாா்.

அப்போது, வீடு மற்றும் பொது இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினாா்.

புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் சுமதி, பூச்சியியல் வல்லுநா் காமராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கனகராஜ், சுகாதார மேற்பாா்வையாளா்கள் முத்துகிருஷ்ணன், புகழேந்தி, ஊராட்சி செயலா்கள் சீனிவாசன், ஆதிமூலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com