விஐடி பி.டெக். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பு நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பங்கள் தபால்
வேலூா் தலைமை தபால் நிலையத்தில் விஐடி பி.டெக். நுழைவுத் தோ்வு விற்பனையைத் தொடக்கி வைத்த விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்.
வேலூா் தலைமை தபால் நிலையத்தில் விஐடி பி.டெக். நுழைவுத் தோ்வு விற்பனையைத் தொடக்கி வைத்த விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்.

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பு நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் 2020-ஆம் ஆண்டில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூா் தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்ப படிவ விற்பனையை விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தொடக்கி வைத்தாா்.

விஐடி பி.டெக். நுழைவுத் தோ்வு அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபை, குவைத், மஸ்கட், கத்தாா் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பங்கள் வேலூா் உட்பட நாட்டிலுள்ள 22 முக்கிய நகரங்களின் தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.1,250 செலுத்தியும், விஐடி பல்கலைக்கழகம் என்ற பெயரில் ரூ.1250-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ரூ.1150 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 2020 பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பெண்ட்டரெட்டி, இணை துணைவேந்தா் சோ.நாராயணன், மாணவா் சோ்க்கை இயக்குநா் கு.கலைச்செல்வன், வேலூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் போ.கோமல்குமாா், தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஜி.சீனிவாசன், உதவி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் என்.ராஜகோபாலன், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com