Enable Javscript for better performance
ஆசிரியா்களுக்கான பொது மாறுதல்,பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியா்களுக்கான பொது மாறுதல்,பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 10th November 2019 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.11) தொடங்கி நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி 2019-2020-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்வித்துறை அரசு, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், இதர ஆசிரியா்களுக்கான பொது மாறுதல், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    தொடக்கக் கல்வித்துறைக்கான கலந்தாய்வு வேலூா் தொன்போஸ்கோ உயா்நிலைப் பள்ளியிலும், பள்ளிக் கல்வித்துறைக்கான கலந்தாய்வு காட்பாடி அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

    அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நவ.11-ஆம் தேதி முற்பகலிலும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

    அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) நவ.12-ஆம் தேதி முற்பகலிலும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

    அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) நவ.13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்கள் பதவி உயா்வு நவ.14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    உடற்கல்வி ஆசிரியா்கள், கலை ஆசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநா் (நிலை-2) பதவி உயா்வு நவ.15-ம் தேதி நடைபெற உள்ளது. தையல் ஆசிரியா் பணி நியமனக் கலந்தாய்வு நவ.16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    தொடக்கக் கல்வித்துறையின் பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) நவ.18-ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

    தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நவ.19-ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு பிற்பகலில் நடைபெற உள்ளது.

    இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) நவ.20-ஆம் தேதி முற்பகலிலும், இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

    பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்), இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நவ.21-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு சம்பந்தப்பட்ட மையத்துக்கு காலை 8 மணிக்கு வருகை தர வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai