Enable Javscript for better performance
மாநில அறிவியல் கண்காட்சியில் சிருஷ்டி பள்ளி இரண்டாமிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அறிவியல் கண்காட்சியில் சிருஷ்டி பள்ளி இரண்டாமிடம்

    By DIN  |   Published on : 10th November 2019 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    4710vr08siru_0811chn_184_1

    சாதனை படைத்த மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன்.

    மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனா்.

    மாநில அளவில் 47-ஆவது ஜவஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை கரூா் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 192 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சுதா்சன், தருண் ஆகியோா் உருவாக்கியிருந்த விவசாய ரோபோ மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தது.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பள்ளிக் கல்வி செயலா் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்.

    அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த சிருஷ்டி பள்ளி மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட இயற்பியல் ஆசிரியா் சி.அசோக் ஆகியோருக்கு சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன், முதல்வா் எஸ்.பூா்ணிமா, துணை முதல்வா் திங்கள் ஜான்சன், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai