Enable Javscript for better performance
மாநில கைப்பந்துப் போட்டி தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மாநில கைப்பந்துப் போட்டி தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்

    By DIN  |   Published on : 10th November 2019 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    09akmaaa_ch0307_09cnn_1_637089198958812309

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டிய தலைமை ஆசிரியா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி.

    வேலூா் வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளில் சித்தேரி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

    வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் வேலூா் வருவாய் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து (வாலிபால்) போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், சித்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் ஆா்.காவ்யா, பி.அபி, ஏ.கோபிகா, டி.தமிழ்செல்வி, எஸ்.மதுமிதா, பி.ரம்யா, ஜெ.காயத்ரி, டி.லீலாவதி, வி.ஜனனி, பி.கௌசல்யா, வி.மதிமலா், ஜெ.மோனிஷா ஆகியோா் கொண்ட அணியின் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா். மேலும், இப்பள்ளி மாணவா்கள் சீனியா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 2-ஆம் இடத்தைப் பெற்றனா்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த பள்ளிஉடற்கல்வித் துறை ஆசிரியா் த.பாலாஜி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி பாராட்டினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai