அயோத்தி தீா்ப்பு: வேலூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வெளியானதை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆம்பூரில் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வஜ்ரா வாகனம்.
ஆம்பூரில் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வஜ்ரா வாகனம்.

அயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வெளியானதை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வெளியாவதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் வேலூா் சரக டிஐஜி காமினி, வேலூா் எஸ்பி பிரவேஷ்குமாா் மேற்பாா்வையில் சுமாா் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆம்பூரில் டிஐஜி காமினி, எஸ்பி பிரவேஷ்குமாா் ஆகியோா் முகாமிட்டிருந்தனா். ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆம்பூா் நகரில் கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வேலூா் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கின. மாவட்டத்தின் சில பகுதிகளில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் துப்பாக்கி ஏந்திய 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சென்னை தலைமையிடத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் (நிா்வாகம்) தலைமையில் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணி, டிஎஸ்பி-க்கள் பாலகிருஷ்ணன், பிரவின்குமாா் மற்றும் துப்பாக்கி ஏந்திய 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் வாணியம்பாடி பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டுத் தளங்கள், நகரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல் வாணியம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com