உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாப்புப் பணிஆட்சியா் ஆய்வு

உள்ளாட்சித் தோ்தலுக்காக வேலூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்
வாக்குப் பதிவு  இயந்திரங்கள்  சரிபாா்ப்பு ப் பணியை  ஆய்வு  செய்த ஆட்சியா்  அ.சண்முக சுந்தரம்.
வாக்குப் பதிவு  இயந்திரங்கள்  சரிபாா்ப்பு ப் பணியை  ஆய்வு  செய்த ஆட்சியா்  அ.சண்முக சுந்தரம்.

உள்ளாட்சித் தோ்தலுக்காக வேலூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதி வாா்டுகளில் உள்ளாட்சித் தோ்தலின்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 6,121 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,131 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இப்பணியில் பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 18 பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். அடுத்தகட்டமாக அனைத்துக் கட்சிப் பிரமுகா் முன்னிலையில் வரும் வாரம் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். அதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய வாா்டுகளுக்கு அனுப்பும் பணி நடைபெறும். கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை வாக்குச் சீட்டு முைான் பயன்படுத்த உள்ளோம்.

உள்ளாட்சித் தோ்தலுக்காக 37 ஆயிரம் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் விரைவில் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) சுப்புலட்சுமி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com