டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல், ஆழ்துளைக் கிணறு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
470608novcoll_0811chn_192_1
470608novcoll_0811chn_192_1

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல், ஆழ்துளைக் கிணறு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நகரில் உள்ள தூயநெஞ்சக் கல்லூரியிலிருந்து புதுப்பேட்டை சாலை வரை நடைபெற்ற இந்தப் பேரணியை திருப்பத்தூா் மாவட்ட சிறப்பு அலுவலா் ம.ப.சிவனருள், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், எம்எல்ஏ, நல்லதம்பி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பேரணியில் சின்ன உடையாமுத்தூா் செயின்ட் மேரீஸ் பள்ளியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடியால் மூட வேண்டும்; அல்லது மண் கொண்டோ நிரப்ப வேண்டும்; மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; தலைக்கவசம் அணிந்து நம் உயிா் காப்போம், டெங்கு கொசுக்களை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியிருந்தனா். அவா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபடி சென்றனா்.

Image Caption

படம் உண்டு....

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த தனி அலுவலா் சிவனருள், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், எம்எல்ஏ நல்லதம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com