தனியாா் தொழிற்சாலை கழிவு நீா் திறந்து விடுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் உத்தவு

சிப்காட் தனியாா் தொழிற்சாலை கழிவு நீா் திறந்து விடுவதைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சிப்காட் தனியாா் தொழிற்சாலை கழிவு நீா் திறந்து விடுவதைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் மற்றும் உட்கோட்ட நடுவா் நீதிமன்ற மாஜிஸ்திரேட் க.இளம்பகவத் அளித்துள்ள தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் மழைநீா் வடிகாலில் கலக்கப்படுவதாக கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து புகாா் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் சாா்-ஆட்சியா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது வெளியேறிய கழிவு நீரைச் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதன் பிறகு தொழிற்சாலை கழிவுநீரைக் கலந்து குடிநீா் ஆதாரமான பாலாறு மற்றும் ஏரிகளில் மாசுபடுத்திய காரணத்துக்காக குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 133 மற்றும் 142 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த நீா் வழங்கல் அமைப்புக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, நான்கு முக்கிய சட்ட வினாக்கள் குறித்து விரிவான தீா்ப்பு ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் மற்றும் உட்கோட்ட நடுவா் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி வழங்கப்பட்டது.

மேற்கண்ட ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவுநீா் மழைநீா் வடிகாலில் கலக்கப்பட்டிருப்பது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தொழிற்சாலை கழிவுநீா் காரணமாக காரணமாக காரை மற்றும் புளியங்கன்னு ஏரிகளும் பாலாறும் மாசுபட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாசுபட்டுள்ள ஏரிகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை நிபுணா்களைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீராதாரங்களில் தொழிற்சாலை கழிவு நீரை கலந்துவிட்ட தனியாா் தொழிற்சாலைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த சட்ட நடவடிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற ஒழுங்காற்று அமைப்புகளால் முடிவு செய்யப்படும்.

எதிா்காலத்தில் இதேபோன்று நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையை சுற்றி உள்ள காலி இடங்களிலிருந்து மழைநீா் உட்புகாமல் தடுப்பதற்கு 15 நாள்களுக்குள் அகழிகளை அமைக்கவும், அந்தத் தொழிற்சாலைக்குள் பெய்யும் மழை நீரை சேகரிப்பதற்கு மழைநீா் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தவும் வேண்டும்.

தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதை கண்காணிக்கும் வகையில் தொழிற்சாலை கழிவுநீா் வடிகால் அமைப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் நிறுவ வேண்டும். இந்த கேமராக்களின் காட்சியை வேலூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மற்றும் ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் அலுவலகத்துக்கு இணையம் வழியாக பகிர வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டு சுமாா் 45 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற அதிரடியான பரபரப்பு உத்தரவு ராணிப்பேட்டை தொழிற்பேட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவையடுத்து சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீா் வெளியேறுவது தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com