புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கும்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்

புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
09abrbus_0911chn_191_1
09abrbus_0911chn_191_1

புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் பா.காா்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வியாபாரிகள், வாகன உரிமையாளா்கள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆட்சியா் நேரில் ஆய்வு: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 46 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும், வேலூா் நகரம் மற்றும் கிரீன் சா்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, எம்எல்ஏ பா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்கு பின்னா், ஆட்சியா் அ.சண்முக சுந்தரம் கூறியது:

பொலிவுறு நகரம் திட்டத்தில் வேலூரை மேம்படுத்துவதற்கான 2-ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதிய பேருந்து நிலையம் மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள், ஆட்டோ, பேருந்து ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ளன. இப்பணிகள் 9 மாதங்கள் அல்லது ஓா் ஆண்டுக்குள் நிறைவடையும். இப்பணிகள் தொடங்கும் முன்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தவும் ஆய்வு செய்து வருகிறோம். தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com