Enable Javscript for better performance
கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை நிறுத்தத்துக்கு திமுக கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை நிறுத்தத்துக்கு திமுக கண்டனம்

    By DIN  |   Published on : 17th November 2019 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17abrdmk_1711chn_191_1

    மாதனூரில் நடைபெற்ற ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்செல்வி.

    ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை பணியைத் தொடங்காமல் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டதைக் கண்டித்து, மாதனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதனூா் ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாதனூா் ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் முன்னாள் ஒன்றியச் செயலா் க. பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றியச் செயலா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் வரவேற்றாா். திமுக வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வி, ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    இதில், நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் தீவிர களப்பணியாற்றி திமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்வது, இளைஞரணி, மகளிரணிகளுக்கு உறுப்பினா்களை சோ்ப்பது, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவைப் பணியை தொடக்காமல் நிறுத்தி வைக்க உத்தரவிட்டதற்கு தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், திமுக மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ஆா்.காா்த்திக் நன்றி கூறினாா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai