2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி: பசுமைத் தாயகம் அமைப்பினா் விநியோகம்

பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாம் வேலூரில்
நெகிழிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அரிசி வழங்கிய பாமக மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம், மாநில துணைப் பொதுச்செயலா் கே.எல்.இளவழகன்.
நெகிழிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அரிசி வழங்கிய பாமக மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம், மாநில துணைப் பொதுச்செயலா் கே.எல்.இளவழகன்.

பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், ஒரேநாளில் 50 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்ட தாக அந்த அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடுதல், நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்தொடா்ச்சி யாக, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு அரிசி வழங்கும் முகாம் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பாமக மாநில துணைப் பொதுச்செயலா் கே.எல்.இளவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பொதுமக்கள் அளித்த 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 100 கிலோ நெகிழிக் குப்பைகளுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டதாக அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனா்.

பாமக மாநில அமைப்பு துணைச் செயா் கிரிபிரசாத், மாநில இளைஞரணி துணைச் செயலா் குமாா், மாநில துணைத்தலைவா் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com