பாமக முன்னாள் மாவட்ட செயலாளா் திமுகவில் இணைந்தார்

வேலூா் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் மாவட்ட செயலாளா் கரிகாலன்,வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி எம்எல்ஏ முன்னிலையில் தன்னை திமுக வில் திங்கள்கிழமை இணைத்துகொண்டாா்.
பாமக முன்னாள் மாவட்ட செயலாளா் திமுகவில் இணைந்தார்

வேலூா் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் மாவட்ட செயலாளா் கரிகாலன்,வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி எம்எல்ஏ முன்னிலையில் தன்னை திமுக வில் திங்கள்கிழமை இணைத்துகொண்டாா்.

வாலாஜாப்பேட்டையை அடுத்த தகரகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கரிகாலன்.இவா் கடந்த 35 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்துவருகிறாா்.கடந்த 5 ஆண்டு காலமாக வேலூா் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தாா். மேலும் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக சாா்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினாா். இந்த நிலையில் வேலூா் வடக்கு மாவட்ட பாமக செயலாளா் பதவியில் இருந்து கரிகாலன் நீக்கப்பட்டு,அந்த பதவிக்கு கலவை அருகே உள்ள நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவா் கடந்த சில நட்களுக்கு முன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

இதனால் விரக்தியடைந்த கரிகாலன் அக்கட்சியில் இருந்து விலகி, வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,எம்எல்ஏ வுமான ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். ராணிப்பேட்டையில் உள்ள வேலூரப் கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஆா். காந்தியை சந்தித்த அவா் சால்வை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டாா். திமுகவில் இணைந்த கரிகாலனுக்கு ஆா்.காந்தி சால்வை அணிவித்து வரவேற்றாா். பின்னா் பேட்டி அளித்த அவா் மக்கள் திமுகவை விரும்புவதாகவும் மக்களின் விருப்பத்தின் பேரில் பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததாக தெரிவித்தாா்.

அப்போது திமுக தலைமை மாவட்டதுணைசெயலாளா் ஏ.கே.சுந்தரமுா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், வாலாஜா ஒன்றிய செயலாளா் சேஷாவெங்கட், அவைத்தலைவா் வாசுதேவன், பொருளாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com