முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஆம்பூா் அருகே 3 கோயில்களில் திருட்டு
By DIN | Published On : 26th November 2019 11:59 PM | Last Updated : 26th November 2019 11:59 PM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் அருகே 3 கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியவெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் சனிக்கிழமை காலை சென்றபோது கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், விடியோ பதிவு கருவி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.
இக்கோயிலுக்கு அருகே உள்ள முருகா் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. மேலும், மோதகப்பல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.