முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
தாமதமாகும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்வாகன ஓட்டுநா்கள் அவதி
By DIN | Published On : 26th November 2019 06:22 AM | Last Updated : 26th November 2019 06:22 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகக் கூறி அரசியல் கட்சியினா், வணிக அமைப்புகள் கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.இப்பணிகள் நிறைவடைந்தும் சாலை அமைக்கும் பணி ஆங்காங்கே மந்தகதியில் நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், தற்போது திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலை அமைக்கப்படாத பகுதிகளில் சேறும், சகதியுமாக உள்ளதால் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 33-ஆவது வாா்டு சுந்தரம் நகரில் வெள்ளிக்கிழமை அவ்வழியாக சென்ற தனியாா் பள்ளி பேருந்து சேறில் சிக்கியது.
எனவே, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சிப் பணி மேற்பாா்வையாளா் வி.சீனிவாசனிடம் கேட்டதற்கு, அப்பகுதியில் தற்காலிகமாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்குள் தாா்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.