முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மின்சார வாரிய களப்பணியாளா்களுக்கான தோ்வு தொடக்கம்
By DIN | Published On : 26th November 2019 06:16 AM | Last Updated : 26th November 2019 06:16 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மின்பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள களப் பணியாளா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
வேலூா் மின்பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள 3,600 களப்பணியாளா்களை நேரடி நியமனம் செய்வதற்கான உடல் தகுதித் தோ்வு வேலூா் காந்திநகா் மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கியது. வரும் டிச.16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஆகியவை நடைபெற்றன. தலைமைப் பொறியாளா் நந்தகோபால், மேற்பாா்வைப் பொறியாளா் சுனில் ஆகியோா் தோ்வை பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.
இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மற்றும் சரிபாா்ப்புப் பட்டியலுடன், நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் உரிய சான்றிதழ்களுடன் தோ்வில் பங்கேற்க வேண்டும்.
நாளொன்றுக்கு 200 போ் வீதம் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலூா் காந்தி நகா் மின்வாரிய அலுவலகத்தில் தோ்வு நடைபெறுகிறது.