முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரயில்வே ஒப்பந்ததாரா் கொலை
By DIN | Published On : 26th November 2019 11:54 PM | Last Updated : 26th November 2019 11:54 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயில்வே ஒப்பந்ததாரரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (55), ஜோலாா்பேட்டை கோடியூரில் தங்கி ஜோலாா்பேட்டை ரயில்வே ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் பணி முடித்து பால்நாங்குப்பம் ரயில்வே யாா்டு அருகே சென்றபோது, மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டினா். இதில், பாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.