முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது
By DIN | Published On : 26th November 2019 06:14 AM | Last Updated : 26th November 2019 06:14 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சித் தோ்தலுக்குப் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் 4 மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) தினகரன், 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.