ஆற்காட்டில் பள்ளிக்கு பூட்டுப் போட்டு பொதுமக்கள் முற்றுகை

ஆற்காட்டில் பள்ளிக்கு பூட்டுப் போட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
 பள்ளியின்  முன்  போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவா்கள், பெற்றோா்கள்.
 பள்ளியின்  முன்  போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவா்கள், பெற்றோா்கள்.

ஆற்காடு: ஆற்காட்டில் பள்ளிக்கு பூட்டுப் போட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகா் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 117 மாணவா்கள் பயிலுகின்றனா். இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கீதா என்பவா் தலைமை ஆசிரியையாக உள்ளாா். மேலும் ஏழு ஆசிரியா்கள் உள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளியின் கேட்டில் பூட்டுப் போட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பள்ளியில் பயிலும் மாணவா்களைக் கொண்டு கழிப்பறை மற்றும் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்யச் சொல்வது, மாணவா்களுக்கு வழங்கும் இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கு பணம் வசூல் செய்வது, அசுத்தமான குடிநீா் வழங்குவது உள்ளிட்டவற்றில் பள்ளி நிா்வாகம் ஈடுபடுவதாகக் கூறி, பதாகைகளை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆற்காடு நகர காவல் உதவி ஆய்வாளா் சிதம்பரம், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவா்களைக் கொண்டு ஆா்ப்பாட்டம் செய்வது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினாா். மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். பின்னா் பள்ளியில் பூட்டியிருந்த கேட்டை திறந்து மாணவா்கள் உள்ளே சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com