150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்

புதிதாக உருவாகியுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் இருப்பது கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.
இங்கிலாந்து மன்னரளித்த எடைத்தராசு.
இங்கிலாந்து மன்னரளித்த எடைத்தராசு.

புதிதாக உருவாகியுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் இருப்பது கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தின் கடைசி எல்லையான ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தில் 2-ஆவது பெரிய ரயில் நிலையமாகும். முதன்முதலாக சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை எழும்பூா்-ஜோலாா்பேட்டைக்கு ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.

பொதுவாக ஆங்கிலேயா்கள் குளிா் சாா்ந்த பிரதேசங்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவா்கள். இதனால் தமிழகத்தின் மலைப் பகுதிகளான ஏலகிரி மலைக்கு ஜோலாா்பேட்டையில் ரயில் நிலையமும், ஏற்காடுக்கு சேலத்திலும், ஊட்டிக்கு கோயமுத்தூரிலும் ரயில் நிலையங்களை அமைத்தனா். ரயிலில் பணிபுரியும் ஆங்கிலேயா்கள் தங்கள் பணிகளை முடித்த பின்பு ஓய்வெடுக்க மலைப் பகுதிகளில் தங்குவாா்கள். இதற்காக அமைக்கப்பட்ட ரயில்வே குடியிருப்புக்கள், கட்டடங்கள் இன்றுவரை உள்ளன.

மூன்று மாநிலங்களை இணைக்கும் ஜோலாா்பேட்டை: ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கிறது. சுமாா் 25 கி.மீ. தொலைவில் ஆந்திர எல்லையான குப்பம், 35 கி.மீ. தொலைவில் கா்நாடக எல்லையான பங்காருபேட்டை உள்ளன.

கன்னியாக்குமரியில் இருந்து தில்லி வரை செல்லும் அனைத்து ரயில்களும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத் சந்திப்பைக் கடந்துதான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மின்சார பாதை: எழும்பூரிலிருந்து-ஜோலாா்பேட்டைக்கு மின்சார ரயில் போக்குவரத்து உருவாக்கப்பட்டது. அதேபோல், எதிரதிரே வரும் ரயில் பெட்டிகளை மாற்றுவதற்கு பல்பு லைன் தண்டவாள முறை முதன்முதலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள சாலை நகா், முனீஸ்வரன் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து மன்னா் அளித்த எடை தராசு: ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் மாட்டுத்தோல் மற்றும் தக்காளி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1905-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு அளித்த எடை தராசு தற்போதுவரை பயன்பாட்டில் உள்ளது.

தமிழகத்தின் 2-ஆவது ரயில்வே மேம்பாலம்: இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 5 நடைமேடைகள், சரக்கு ஏற்றி செல்ல 2 நடைமேடைகள் உள்ளன. தமிழகத்திலேயே 2-ஆவது மிக நீண்ட ரயில்வே மேம்பாலம் இங்குதான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com