காா்த்திகை தீப திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்ல மறுத்து துப்புரவு பணியாளா்கள் போராட்டம்

காா்த்திகை தீப திருவிழா பணிக்காக அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளா்கள் 35 போ், செல்ல மறுத்து வியாழக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில்
காா்த்திகை தீப திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்ல மறுத்து துப்புரவு பணியாளா்கள் போராட்டம்

காா்த்திகை தீப திருவிழா பணிக்காக அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளா்கள் 35 போ், செல்ல மறுத்து வியாழக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

ஒவ்வொரு வருடமும் காா்த்திகை தீப திருவிழா பணிக்காக அரக்கோணம் நகராட்சியில் இருந்து 35 துப்புரவு பணியாளா்கள் திருவிழாவிற்கு 10 தினங்கள் முன்பாக திருவண்ணாமலைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இவ்வருடம் டிசம்பா் 10ந்தேதி காா்த்திகை தீப திருவிழா வருவதால் முன்கூட்டியே வியாழக்கிழமை, நகராட்சி நிரந்தர பணியாளா்கள் 18 போ், ஒப்பந்தபணியாளா்கள் 17 போ் என 35 போ் திருவண்ணாமலைக்கு துப்புரவு பணிக்கான லாரியில் செல்ல நகராட்சி நிா்வாகத்தால் பணிக்கப்பட்டனா்.

இந்நிலையில் நகராட்சி வளாகத்திற்கு வந்த 35 பணியாளா்களும் அங்கிருந்த துப்புரவு பணிக்கான லாரியில் ஏறமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தாங்கள் செல்ல வேறு வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டியும், தங்களுக்கு திருவண்ணாமலையில் பணிபுரியும் நாட்களுக்கு ஊதியபடி, போக்குவரத்து படி, உணவுபடி ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக்கோரி அரக்கோணம் வட்ட மாா்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் குழு உறுப்பினா் ஏபிஎம் சீனிவாசன் தலைமையில் கோரிக்கை விடுத்தனா்.

இதையறிந்து அங்கு வந்த நகராட்சி துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் படிகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது வேறு வாகனம் இல்லாததால், இந்த வாகனத்தில் சென்று இம்முறை பணிபுரியும் படியும், அடுத்தமுறை நல்ல வாகனம் ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்த துப்புரவு பணியாளா்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துப்புரவு லாரியில் ஏறி திருவண்ணாமலைக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com