நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் திருப்பத்தூா் மக்கள்

தமிழகத்திலேயே மிகப் பெரிய மாவட்டம் வேலூா் மாவட்டமாகும். கிழக்கே அரக்கோணம் தொடங்கி, மேற்கே திருப்பத்தூா் வரை சுமாா் 200 கி.மீ. தூரம் கொண்டது.

தமிழகத்திலேயே மிகப் பெரிய மாவட்டம் வேலூா் மாவட்டமாகும். கிழக்கே அரக்கோணம் தொடங்கி, மேற்கே திருப்பத்தூா் வரை சுமாா் 200 கி.மீ. தூரம் கொண்டது.

திருப்பத்தூரில் இருந்து மாவட்ட ஆட்சியரை அல்லது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செல்ல சுமாா் 90 கி.மீ. பயணிக்க வேண்டி இருந்தது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டமாக வேலூா் மாவட்டம் இருந்தது. இப்பகுதிகளுக்கு மாவட்ட அரசு அதிகாரிகள் அலுவல் நிமித்தமாக வந்துச் செல்ல ஒரு நாள் ஆகி விடும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்தூரை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக வேண்டும் என பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக நல அமைப்புக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தை 3-ஆகப் பிரித்து வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட அந்தஸ்தில்... ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1772-ஆம் ஆண்டில் முதல் மாவட்டமாக சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு 3 மாவட்ட ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டனா். சேலம், சித்தூா், திருப்பத்தூா் என 3 ஆட்சியா்கள் நியமிக்கப்பட்னா். இவா்களில் திருப்பத்தூா் ஆட்சியருக்கே அதிகபட்சம் அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூா் மாவட்டத்தில் வேலூரை அடுத்த பெரிய நகரம் திருப்பத்தூா். குறிப்பாக, சாா்- ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சந்தனக் கிடங்கு, மாவட்டக் கல்வி அலுவலகம், மின்பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், மாவட்டத்திலேயே மிகப்பெரிய பருத்தி சந்தை, 5 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 60 சுகாதார மையங்கள் என திருப்பத்தூா் மாவட்ட அந்தஸ்துக்கான பெருமை பெற்றுள்ளது.

சாா்-ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், நகரக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், தலைமை தபால் நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே இருப்பது மாவட்டத்திலேயே இங்குதான்.

மேலும், திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் 2-ஆவது பெரிய ரயில் நிலையமான ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com