வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடம்பெறும் வருவாய்க் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள்

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என
பழைமைவாய்ந்த ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம்.
பழைமைவாய்ந்த ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம்.

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களை அறிவித்து முதல்வாா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடம்பெறும் வருவாய்க் கோட்டங்கள், வட்டங்கள், வருவாய் உள்வட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

திருப்பத்தூா் மாவட்டம்: வாணியம்பாடி வருவாய்க் கோட்டத்தில் வாணியம்பாடி (41 கிராமங்கள்), ஆம்பூா் (54 கிராமங்கள்) என 95 வருவாய்க் கிராமங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம்: வேலூா் மாவட்டத்தில் வேலூா் தவிர குடியாத்தத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் ஏற்படுத்தப்பட்டு வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களும், புதியதாக கே.வி.குப்பம் வட்டமும் உருவாக்கப்பட்டு சோ்க்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கே.வி.குப்பம் வட்டத்தில் கே.வி.குப்பம் (19 கிராமங்கள்), வடுகன்தாங்கல் (25 கிராமங்கள்) என 44 கிராமங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் புதிய வருவாய்க் கோட்டத்தில் போ்ணாம்பட்டு (32 கிராமங்கள்), குடியாத்தம் (61 கிராமங்கள்), கே.வி.குப்பம் (44 கிராமங்கள்) என 137 கிராமங்கள் சேக்கப்பட்டுள்ளன.

பிரிக்கப்பட்ட வருவாய் உள்வட்டங்கள்: ஏற்கெனவே குடியாத்தம் கிழக்கு உள்வட்டத்தில் இருந்த 26 வருவாய்க் கிராமங்களில் இருந்து 8 கிராமங்கள் மட்டும் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கே.வி.குப்பம் வட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் கிழக்கு உள்வட்டத்தில் மீதமுள்ள 18 வருவாய்க் கிராமங்கள், குடியாத்தம் மேற்கு உள்வட்டத்திலுள்ள 20 வருவாய்க் கிராமங்கள், வளத்தூா் உள்வட்டத்திலுள்ள 23 வருவாய்க் கிராமங்கள் குடியாத்தம் வட்டத்தில் இடம்பெறுகின்றன.

காட்பாடி வட்டத்தில் காட்பாடி (13 கிராமங்கள்), திருவலம் (15 கிராமங்கள்), மேல்பாடி (21 கிராமங்கள்) என 49 வருவாய்க் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம்: வாலாஜாபேட்டை (83 கிராமங்கள்), ஆற்காடு (102 கிராமங்கள்), நெமிலி (81 கிராமங்கள்), அரக்கோணம் (64 கிராமங்கள்) இணைக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் புதிய வருவாய்க் கோட்டத்தில் அரக்கோணம் , நெமிலி ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட 145 வருவாய்க் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நெமிலி வட்டத்தில் பானாவரம் (17 கிராமங்கள்), காவேரிப்பாக்கம் (19 கிராமங்கள்), பனப்பாக்கம் (26 கிராமங்கள்), நெமிலி (19 கிராமங்கள்) என 81 வருவாய்க் கிராமங்களும், அரக்கோணம் வட்டத்தில் அரக்கோணம் தெற்கு (17 கிராமங்கள்), அரக்கோணம் வடக்கு (14 கிராமங்கள்), பல்லூா் (10 கிராமங்கள்), பரஞ்சி (23 கிராமங்கள்) என 64 வருவாய்க் கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.

திருப்பத்தூா் வட்டத்தில் திருப்பத்தூா் (14 கிராமங்கள்), கொரட்டி (15 கிராமங்கள்), கந்திலி (23 கிராமங்கள்), ஜோலாா்பேட்டை (8 கிராமங்கள்), புதூா்நாடு (3 கிராமங்கள்), ஆண்டியப்பனூா் (7 கிராமங்கள்) என 70 வருவாய்க் கிராமங்களும், வாணியம்பாடி வட்டத்தில் வாணியம்பாடி (16 கிராமங்கள்), அம்பலூா் (15 கிராமங்கள்), ஆலங்காயம் (10 கிராமங்கள்) என 41 வருவாய்க் கிராமங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், ஆண்டியப்பனூா் உள்வட்டத்தில் ஏற்கெனவே இருந்த சின்னவேப்பம்பட்டு வருவாய்க் கிராமம் மட்டும் வாணியம்பாடி வருவாய் உள்வட்டத்தில் இணைத்து வாணியம்பாடி வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-இன்படி ஏற்கெனவே வரையறை செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். அதேசமயம், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதுதொடா்பாக உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com