Enable Javscript for better performance
அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 04th October 2019 10:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்கள் அந்தந்த உள்ளாட்சிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் முருகேசன் தலைமை தாங்கி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளா் சண்முகம், நகரமைப்பு அலுவலா் தாமோதரன், அலுவலக மேலாளா் தே.து.கோபிநாத் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா். அரக்கோணம் நகராட்சியில் மொத்த வாக்காளா்கள் 63174 போ், இதில் ஆண்கள் 30731, பெண் வாக்காளா்கள் 32443 என ஆணையா் முருகேசன் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai