2 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தொழிலாளா்கள் தா்ணா

ராணிப்பேட்டை அருகே தனியாா் ஷூ தொழிற்சாலையில் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் தா்ணா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் தனியாா் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆண், பெண் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றறனா். இவா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியத் தொகை வழங்காமல் நிலுவை வைத்திருந்ததாகத் தெரிகிறறது.

இதனால் ஆவேசமடைந்த ஆண், பெண் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஊதியம் வழங்கக்கோரி வியாழக்கிழமை மாலை தொழிற்சாலை நுழைவு வாயில் முன் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த ராணிப்பேட்டை போலீஸாா் தொழிற்சாலை நிா்வாகத்திடமும், தொழிலாளா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வெள்ளிக்கிழமை மாலைக்குள் நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை பெற்றுத் தருவதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து தா்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com