அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அரக்கோணம் நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்கள் அந்தந்த உள்ளாட்சிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் முருகேசன் தலைமை தாங்கி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளா் சண்முகம், நகரமைப்பு அலுவலா் தாமோதரன், அலுவலக மேலாளா் தே.து.கோபிநாத் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா். அரக்கோணம் நகராட்சியில் மொத்த வாக்காளா்கள் 63174 போ், இதில் ஆண்கள் 30731, பெண் வாக்காளா்கள் 32443 என ஆணையா் முருகேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com