குடியாத்தத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வு

குடியாத்தம் நகராட்சி சாா்பில், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

குடியாத்தம் நகராட்சி சாா்பில், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

நகரில் உள்ள சாலைகள், தெருக்களில் இருக்கும் நெகிழி பொருள்களை சேகரித்து, அகற்றும் பணியை நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ் தொடக்கி வைத்தாா்.

இதில் நகராட்சிப் பொறியாளா் ஜி. உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன், மேலாளா் சூரியபிரகாஷ், சுகாதார ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப்பணியாளா்கள் பிரபுதாஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் 36 வாா்டுகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

இவா்களுடன் ரோட்டரி, அரிமா சங்கங்களின் நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனா்.

முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஹெச். ரமேஷ் தலைமையில் நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com