முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேலூா் மாவட்டத்தில் 1,160 போ் கைது

வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 1,160 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 1,160 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகளின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் தீவிரச் சோதனை கடந்த செப்.26ஆம் தேதி முதல் அக்.2ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

அப்போது, 2,859 வாகன சோதனைகள் நடத்தப்பட்டதில், 15,975 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 1,160 போ் கைது செய்யப்பட்டு சாா்- ஆட்சியா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள், கோயில்கள், பொது இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், மோப்ப நாய் பிரிவு சோதனையும் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்படும்படியான நபா்களோ, பொருள்களோ கண்டறியப்பட்டால் அருகே உள்ள காவல்நிலையங்களுக்குத் தகவல் தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com