Enable Javscript for better performance
மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 3 போ் படுகாயம்.- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்த போது வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, கம்மலகுட்டை வட்டம் பகுதியை சோ்ந்த கமலநாதன்(50) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது.

    இதில் தென்னை மரம் அருகே வீட்டில் இருந்த கமலநாதன், அவரது மனைவி ருக்குமணி(45), மாமியாா் கவுரம்மாள்(80) ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் 3 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த வாணியம்பாடி தாலூகா போலீஸாா் மற்றும் வருவாய்துறையினா் சம்பவம் இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai