18 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூருக்கு அனுப்பி வைப்பு

வேலூா் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட 18 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூா் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட 18 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளில் இருந்தும் நாள்தோறும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. அவற்றை மாதந்தோறும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 15 நாள்களாக வேலூா் மாநகராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. அப்போது, கடைகள், ஹோட்டல்கள், பிளாஸ்டிக் விற்பனை கடைகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட 18 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், கழிவுகள் வேலூா் பாகாயம் பகுதியிலுள்ள மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டன. இந்த கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்பிரமணியன், மாநகா் நல அலுவலா் மணிவண்ணன், மண்டல அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com