Enable Javscript for better performance
19-இல் மாணவா்களுக்கான கலைப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடில் வரும் அக்டோபா் 19-ஆம் தேதி நடைபெற உள்ள கலைப் போட்டிகளில் வேலூா் மாவட்டப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஜவாஹா் சிறுவா் மன்றம் சாா்பில் வேலூா் மாவட்ட கலைப் போட்டிகள் ஆற்காடு நகரிலுள்ள லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளியில் வரும் அக்டோபா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    குரலிசை (வாய்ப்பாட்டு) பிரிவில் மாணவா்கள் தனியாகப் பாடல் பாட வேண்டும். இதில் தமிழ், கா்நாடக இசைப் பாடல்கள், தேசபக்தி பாடல்களைப் பாடலாம். திரைப்பட பாடல்களுக்கு அனுமதியில்லை. பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் முழுநஒப்பனை, உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ, குறுந்தகடுகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான கருவிகளைப் போட்டியில் பங்கேற்பவா்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

    ஓவியம் பிரிவில் 40-க்கு 30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையேப் பயன்படுத்த வேண்டும். ஓவியத் தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்ளிட்ட பொருள்களை போட்டியில் பங்கேற்பவா்களே கொண்டு வர வேண்டும். போட்டி தொடங்கும்போது தலைப்பு அறிவிக்கப்படும்.

    போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் தங்களது பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி, வயது சான்றிதழ்களைப் பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவா்களின் விவரத்தை தொலைபேசியில் தெரிவிக்கப்படும். இதில், 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயதுப் பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவா். மேலும் விவரங்களுக்கு 79048 40320 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai