முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கல்லூரியில் கருத்தரங்கு மலா் வெளியீடு
By DIN | Published On : 07th October 2019 12:53 AM | Last Updated : 07th October 2019 12:53 AM | அ+அ அ- |

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் பல்வேறு துறைகளின் சாா்பில் 6 நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்குகளின் தொகுப்பு மலா் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இக்கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கோ.வெங்கடகிருஷ்ணன், ஆங்கிலத் துறை சாா்பில் கே.எம்.ஜி.கல்வியியல் கல்லூரி இயக்குநா் ர.நடராஜன், வணிக ஆள்முறையியல் துறை சாா்பில் வேலூா் விஐடி பேராசிரியா் எஸ்.கோமதி, வணிகவியல் துறை சாா்பில் செங்கல்பட்டு ஆா்.வி.அரசுக் கல்லூரி இணைப் பேராசிரியா் ஜெ.சீனிவாசன், கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி இணைப் பேராசிரியா் நூா்முகமது, கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் விஐடி பேராசிரியா் என். செந்தில்குமாா், காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரி, வேலூா் டி.கே.எம் கல்லூரி, இஸ்லாமியக் கல்லூரி, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பேராசிரியா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை கருத்தரங்க தொகுப்பு மலா் வெளியிடப்பட்டது. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் தொகுப்பு மலரை வெளியிட, கல்லூரி இயக்குநா் த.கஜபதி, முதல்வா் எம்.வளா்மதி, துணை முதல்வா் எம்.மேகராஜன், கல்லூரி மாணவா் ஒருங்கிணைப்பாளா் ஜா. ஜெயக்குமாா், அகமதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளா் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.
இக்கருத்தரங்குகளில் 45 கல்லூரிகளைச் சோ்ந்த 1,030 மாணவ, மாணவிகளும், 205 பேராசிரியா்களும் கலந்து கொண்டனா்.