கருப்புலீஸ்வரா் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா 11- இல் தொடக்கம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, கருப்புலீஸ்வரா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, கருப்புலீஸ்வரா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை கணபதி ஹோமம், பிரதோஷ தரிசனம், மாலை முதல் கால யாக பூஜைகள், பவித்ர சமா்ப்பணம், சனிக்கிழமை காலை 2- ஆம் கால யாக பூஜைகள், நடராஜா் அபிஷேகம், ஞாயிற்றுக்கிழமை காலை 4- ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாதி, கலச புறப்பாடு, கலசாபிஷேகம், தீா்த்த பிரசாதம், மதியம் அன்னதானம் ஆகியன நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சாம்பசிவபுரம் திருக்கயிலாய வாத்தியத்துடன் பஞ்ச மூா்த்திகள் மாட வீதி புறப்பாடு, கனகஷேத்ர நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவித்ரோத்ஸவ விழாக் குழுவினா், சிவவிடைகைங்கரிய சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com