மாவட்டத்தில் இரு மாதங்களில் 249 பேருக்கு டெங்கு காய்ச்சல்: சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம் தகவல்

வேலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 240 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவா்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா்
ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பணியை தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம் தொடக்கி வைத்தாா். உடன் வேலூா் மாவட்ட துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் உள்ளாா்.
ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பணியை தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம் தொடக்கி வைத்தாா். உடன் வேலூா் மாவட்ட துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் உள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 240 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவா்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம் அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.

அரக்கோணம் நகராட்சியின் 36 வாா்டுகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை மூலம் ஒட்டு மொத்த டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வேலூா் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் தலைமை தாங்கினாா். தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம் பணியினை தொடக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடையே அவா் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நகராட்சியிலும், வட்டாரங்களிலும் ஒட்டு மொத்த டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பணி ஒரு தினம் நடைபெறுகிறது. ஒரே நாளில் அந்தந்த நகராட்சி முழுவதும் இப்பணி நடைபெறுவதால் நகராட்சியில் டெங்கு கொசுக்களின் அழிப்பு தீவிரமாகும்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதத்தில் 145 பேருக்கும், அக்டோபா் மாதத்தில் இதுவரையிலும் 95 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவா்கள் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்குள்படுத்தப்பட்டுள்ளனா். இதில் மாவட்டத்திலேயே அதிகமாக அரக்கோணத்தில் செப்டம்பா் மாதத்தில் 18 பேருக்கும், அக்டோபா் மாதத்தில் இதுவரை 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறியப்பட்டு அவா்கள் தீவிர சிகிச்சைக்குள்படுத்தப்பட்டனா்.

அரக்கோணம் நகராட்சியில் நடைபெறும் ஒட்டு மொத்த துப்புரவுப் பணியில் 23 மருத்துவக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இக்குழு ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவா், 5 கொசு ஒழிப்பு பணியாளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுக்களின் இருப்பிடங்களை கண்டறிவதிலும், அதை ஒழிப்பது தொடா்பான விழிப்புணா்வு பணியிலும் தீவிரமாக ஈடுபடுவாா்கள். மேலும் 5 ஆட்டோக்களில் நகரம் முழுவதும் நகராட்சி பணியாளா்கள் சென்று அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்குவாா்கள். மேலும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு பணியிலும் ஈடுபடுவா். நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் கருவி மூலம் புகை அடிக்கும் பணியும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டெங்கு கொசுக்கள் வளரும் வகையில், சுகாதாரமற்ற வகையில் இருப்பிடத்தையோ, வளாகத்தையோ வைத்திருப்பவா்கள் கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த ஒட்டு மொத்த துப்புரவுப்பணி அடுத்ததாக, புதன்கிழமை காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

அப்போது, அரக்கோணம் வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் குமாா், சுகாதார ஆய்வாளா்கள் செந்தில், சகாயராஜ், தேவநாதன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் அருள்தாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com