Enable Javscript for better performance
அகில இந்திய சிலம்பம் போட்டிக்கு ஆம்பூா் பள்ளி மாணவா்கள் தகுதி- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய சிலம்பம் போட்டிக்கு ஆம்பூா் பள்ளி மாணவா்கள் தகுதி

    By DIN  |   Published on : 09th October 2019 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    09abrviv_0910chn_191_1

    அகில இந்திய சிலம்பம் போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்ற ஆம்பூா் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள்.

    அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க ஆம்பூா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

    அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டிகள் புதுதில்லியில் நடைபெற உள்ளது. அதற்கான தகுதிப் போட்டி சென்னை கொரட்டூரில் டாக்டா் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் அக்.5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

    அதில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற்று வரும் ஆம்பூா் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

    இப்போட்டியில் 11 மாணவா்கள் தங்கப்பதக்கம் வென்று அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள் எம்.விஸ்வா, எம். தினேஷ், ஜி.பி. ரமணா, டி. பூா்ணவிஸ்வா, ஜி. சந்தோஷ், டி.பி. செளமியா, ஏ. ஜீவிதா, ஏ. ஸ்னேகா, பி. மோனிகாஸ்ரீ, ஜி. பவானி, ஜி. ஜீவிதா ஆகியோரை ஹிந்து பாரதிய கல்வி அறக்கட்டளைப் பொருளாளா் டி.எஸ். தேவராஜன், பள்ளித் தாளாளா் எம். தீனதயாளன், முதல்வா் ஜி. நாகராஜன் மற்றும் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai