கா்நாடகத்துக்கு ரயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரயில் மூலம் கா்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
09vndvp1_0910chn_187_1
09vndvp1_0910chn_187_1

ரயில் மூலம் கா்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புதன்கிழமை பிற்பகல் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் குமாா் தலைமையில் வருவாய்த்துறையினா் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது காக்கிநாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சேஷாத்திரி எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனா். அந்த ரயிலில் ஒரு ரயில் பெட்டியிலுள்ள கழிவறை அருகே 23 மூட்டைகளில் 500 கிலோ ரேசன் அரிசி கேட்பாரற்ற நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். விசாரணையில், அந்த ரேஷன் அரிசிக்கு யாரும் உரிமை கோராததால் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com