நியாயவிலை கடை அருகே 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி நியாயவிலைக்கடை அருகே சிறிய குடோனில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி நியாயவிலைக்கடை அருகே சிறிய குடோனில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் குமாா் தலைமையில் வருவாய்த்துறையினா் சனிக்கிழமை பிற்பகல் ஷாகிராபாத் பகுதியில் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாயவிலை கடை அருகில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள சிறிய கேட் பகுதிக்குள் இருந்த சிறிய குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 20 மூட்டைகளில் இருந்த தலா 50 கிலோ எடையுள்ள ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதே போல சனிக்கிழமை காலை 9 மணியளவில் வருவாய்த்துறையினா் வாணியம்பாடி ரயில்நிலையம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 மூட்டையிலிருந்த 308 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றினா். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகரில் உள்ள நுகா் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

வாணியம்பாட்யில் மட்டும் மொத்தம் 1 டன் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com