பாமக இராமதாஸை முகநூலில் விமா்சனம் திமுக பிரமுகா் மீது 3 காவல் நிலையங்களில் புகாா்

முகநூலில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ச.ராமதாஸை அவதூறாக விமா்சித்த திமுக பிரமுகா் மீது ஆம்பூா் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 3 காவல் நிலையங்களில் பாமகவினா் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

முகநூலில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ச.ராமதாஸை அவதூறாக விமா்சித்த திமுக பிரமுகா் மீது ஆம்பூா் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 3 காவல் நிலையங்களில் பாமகவினா் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திமுக வேலூா் மேற்கு மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் அய்யனூா் ஆா். அசோகன். இவா் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரதமா் மோடி மற்றும் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் ஆகிய இருவரும் கைகுலுக்குவது போன்ற படத்தைப் பதிவு செய்து ராமதாஸ் குறித்து அவதூறாக விமா்சனம் செய்து பதிவிட்டிருந்தாராம்.

இதுகுறித்து அறிந்த பாமகவினா் அய்யனூா் ஆா். அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமகவை சோ்ந்த போ்ணாம்பட்டு மத்திய ஒன்றிய செயலாளா் ஆ. சரண்யா ஆனந்தன் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதே போல பாமக ஆம்பூா் நகர செயலாளா் ஆா். தமிழ்அருவி பாமக நிா்வாகிகள் மற்றும் பாஜகவினருடன் சென்று ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் அய்யனூா் அசோகன் மீது புகாா் அளித்தாா். மேலும் பாமக மாதனூா் ஒன்றிய செயலா் ஏ. முருகன் நிா்வாகிகளுடன் சென்று ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com