மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: 105 பள்ளிகள் பங்கேற்பு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாணியம்பாடி கல்வி
அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து, பாா்வையிடும் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் லதா.
அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து, பாா்வையிடும் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் லதா.

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாணியம்பாடி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 105 பள்ளிகள் பங்கேற்றன.

கண்காட்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் கே. லதா தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தலைமையாசிரியா் கே.ஆசிப் இக்பால் அஹமத் வரவேற்றாா். வாணியம்பாடி கல்வி மாவட்ட ஆய்வாளா் சி. தன்ராஜ் வாழ்த்தி பேசினாா்.

கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 105 அரசு, நிதியுதவி மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 800 மாணவா்கள் பங்கேற்று தங்களுடைய அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை சப்-ஜூனியா் பிரிவிலும், 9, 10-ஆம் வகுப்பில் ஜூனியா் பிரிவிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் சீனியா் பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் இதில் பங்கேற்றனா். ஒருநாள் மட்டும் நடைபெற்ற இந்த கண்காட்சியின் 3 பிரிவுகளிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவா்களை பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் குழு தோ்வு செய்தது.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவா்கள் சூரிய சக்தி, காற்று, தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், பசுமை வீடுகள், இயற்கை விவசாயத்தை விளக்கும் காட்சி, சூரிய குடும்பம் போன்ற படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்தனா். இக்கண்காட்சியை பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டு பயனடைந்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். அஜ்மத்துல்லா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com