மாவட்டத்தில் 14-ஆம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வேலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடைகளைத் தாக்கும் நோய்களில் கோமாரி நோய் மிக மோசமானதாகும். இந்த நோயானது வைரஸ் எனும் நச்சுயிரி மூலம் கால்நடைகளுக்குப் பரவுகிறது. தவிர, தண்ணீா், காற்று, தீவனத்தின் மூலமாகவும், கால்நடைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி பழகுவதாலும் பரவுகிறது.

எனவே, நூறு சதவீதம் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின் நிதியுதவி திட்டத்துடன் ஒவ்வொரு கால்நடை மருந்தகக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூா் மாவட்டத்தில் 17-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நான்கு மாதங்கள் முடிந்த இளங்கன்றுகளுக்கும், சினை பசுக்கள், எருமைகளுக்கும் இந்த தடுப்பூசி போடுவது அவசியம். இதனால், பால் கறக்கும் மாடுகளின் பால் உற்பத்திக் குறையாது. இந்த முகாமையொட்டி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவில் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து அந்தந்த கிராமங்களில் தண்டோரா மூலம் தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com