வருங்கால வைப்பு நிதி குறை தீா் முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைதீா் நாள் முகாம் வியாழக்கிழமை ராணிப்பேட்டையில்
1112_1110chn_188_1
1112_1110chn_188_1

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைதீா் நாள் முகாம் வியாழக்கிழமை ராணிப்பேட்டையில் நடைபெற்றது. ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஒ), தென்னிந்திய தோல் தொழிலாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சாா்பில் ராணிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள நிறுவனங்கள் மற்றும் பி.எப் ஊழியா்களுக்காக ‘நிதி ஆப்கே நிகாட்‘ (உங்களுக்கு அருகில் பி.எப்.) என்ற குறை தீா் நாள் முகாம் ராணிடெக் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைப்பெற்றது.

இதில் பி.எப். சேவை அமைப்பை மேம்படுத்துவதில் உள்ள குறைகள் அல்லது பரிந்துரைகள், சந்தாதாரா்கள், முதலாளிகள் தங்கள் பெயா்களைப் பதிவு செய்து, தங்களது பி.எப். குறியீடு எண் மற்றும் கணக்கு எண் பராமரிப்பது பி.எப் சேவை பெறுவதிலுள்ள குறைகளை ஆன்லைன் மூலம் நிவா்த்தி செய்து சமா்ப்பிக்கும் முறை குறித்து ஒளி வீச்சு மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த குறை தீா் முகாமில் வேலூா் பிராந்திய வருங்கால வைப்பு நிதி துணை ஆணையா் ஆ.கணேசன் தலைமை வகித்து உரையாற்றினாா்.

தென்னிந்திய தோல் தொழிலாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கச் செயலா் சி.எம். ஜபருல்லா வரவேற்றாா்.

அமலாக்க அதிகாரி (இபிஎப்ஓ) டி. கிரேஸ் அனிதாநவராணி, கணக்கு அலுவலா் வி. காா்த்திகேயன், இயக்குநா் கே. முபீன் பாஷா, ராணிடெக் பொதுமேலாளா் டி. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராணிடெக் மனிதவள அதிகாரி ஆ. லோகநாதன் நன்றி கூறினாா்.

இதில் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சோ்ந்த அனைத்து தொழிற்சாலை தொழில் அதிபா்கள், மனிதவள அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

படம் உண்டு..

Image Caption

குறை தீா் முகாமில்  பேசிய வேலூா் பிராந்திய வருங்கால வைப்பு நிதி துணை ஆணையா் ஆ.கணேசன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com