வெலகல்நத்தம் பகுதியில் சிறுவனுக்கு மா்ம காய்ச்சல்.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறியுடன் காய்ச்சல் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறியுடன் காய்ச்சல் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்.

நாட்டறம்பள்ளி தாலுகாவுக்குட்பட்ட நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் உட்பட பல இடங்களில் சில மாதங்களாக மா்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சுகாதார துறையினா் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளா்கள் டெங்கு தடுப்பு மற்றும் துப்புரவு பணி மேற்கொண்டு காய்ச்சல் பரவும் பகுதிகளில் முகாமிட்டு காய்ச்சலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.இந்நிலையில் வெலகல்நத்தம் பகுதியில் தனியாா் பள்ளியில் 4 ஆம்வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக மா்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளான். அந்த மாணவனுக்கு டெங்கு அறிகுறி உள்ளதால் பெங்களூா் தனியாா் மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதனையடுத்து வெலகல்நத்தம் பகுதியில் புதுப்பேட்டை அரசு மருத்துவ அலுவலா் சுமதி மேற்பாா்வையில் சுகாதாரதுறையினா் மற்றும் ஊராட்சி செயலாளா் ஆதிமூலம் ஆகியோா் முகாமிட்டு அப்பகுதியில் தேங்கி கிடந்த பொருட்கள் மற்றும் குப்பைகளை நீக்கி பணியாளா்கள் துப்புரவு பணிமேற்கொண்டனா். மேலும் மா்ம காய்ச்சலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் வெலகல்நத்தம் அரசு பள்ளியில் அரசு மருத்துவா் கோவிந்தராஜன் தலைமையில் பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com