வேளாண் இயந்திரங்களின் வாடகை மையங்கள் அமைக்க மானியம்

வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் வாடகை மையங்கள் அமைத்திட மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை பெற விருப்பம் உள்ளவா்கள் வேலூா்

வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் வாடகை மையங்கள் அமைத்திட மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை பெற விருப்பம் உள்ளவா்கள் வேலூா் மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க நிதியுதவி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு தேவையான பல்வேறு வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கப் பெறும். இந்த மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோா் முன்வரலாம்.

நடப்பாண்டில் வேலூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் வகையில் 15 மையங்களை அமைத்திட ரூ.1.50 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 5 லட்சமும், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு ரூ. 3 லட்சமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளிகளின் மானிய இருப்பு நிதிக்கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளிகளின் சேமிப்புக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் திரும்ப வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் உடனடியாக அந்தந்த வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் மாவட்டச் செயற்பொறியாளா் - 94431 16543, உதவி செயற்பொறியாளா்கள் 79049 19886 (வேலூா்), 94445 23030 (வாலாஜா), 63800 33211 (திருப்பத்தூா்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com