கற்பகம் கூட்டுறவு அங்காடியில் ரூ.1.20 கோடிக்கு பட்டாசு குவிப்பு

தீபாவளியையொட்டி வேலூரிலுள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பட்டாசு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தீபாவளியையொட்டி வேலூரிலுள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பட்டாசு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இங்கு இந்தாண்டு ரூ.1.20 கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி அக்டோபா் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, வேலூா் அண்ணா சாலையிலுள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில் சிறப்பு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இங்கு பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் ரூ.525 முதல் ரூ.3,306 வரை விற்பனைக்கு வந்துள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கக் கூடிய பேன்சி பட்டாசு ரகங்கள், டவா் பாட்ஸ், ஜூவல் பாட்ஸ் ஆகிய புதிய ரக பட்டாசுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 100 முதல் 10 ஆயிரம் வரையிலான சரவெடிகள் உள்ளன. இந்த கற்பகம் கூட்டுறவு அங்காடியில் கடந்தாண்டு ரூ.90 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ரூ.1.20 கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூா் ஆகிய இடங்களில் உள்ள கற்பகம் கூட்டுறவு கிளை அங்காடிகளிலும் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளா் சா.திருகுணஐயப்பதுரை தெரிவித்தாா்.

முன்னதாக, தீயணைப்புத்துறை சாா்பில் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பண்டகசாலை தலைவா் சுமைதாங்கி சி.ஏழுமலை, வேலூா் மண்டல இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா், துணை பதிவாளா் செ.அ.ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உண்டு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com