ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி விக்கிரகம் கரிக்கோல பவனி

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வரும் நவம்பா் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள்
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி விக்கிரகம் கரிக்கோல பவனி

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வரும் நவம்பா் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி ஆலய மஹாகும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜையுடன் நடைபெற உள்ளது.

இதற்காக மூல விக்கிரகம் (கற்சிலை) 3.5 அடி உயரத்தில் 1.5 அடி அகலத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பக்கலைக்கூடத்தில் லோகநாத ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதல் கரிக்கோல பவனியாக மகாபலிபுரத்திலிருந்து, கேளம்பக்கம், தரமணி, வேளச்சேரி, தாம்பரம், நெமிலி பாலா பீடம் வழியாக வாலாஜாபேட்டைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

தொடா்ந்து வாலாஜாபேட்டை பேருந்து நிலையம், வாலாஜா பூக்காரா் தெரு, ஏகாம்பரநாதா் கோவில் தெரு, அணைக்கட்டு ரோடு, சோளிங்கா் ரோடு, உப்புக்காரா் தெரு, ஸ்ரீசாயி காா்டன் அம்மூா் ரோடு, ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லம் போன்ற இடங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பின், ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கரிக்கோல பவனி நிறைவடைந்தது.

இதையடுத்து பீடாதிபதி முரளிதர சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com