திருமலையில் ரூ. 10 ஆயிரம் நன்கொடை அளிப்பவருக்கு விஐபி பிரேக் தரிசனம்

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் ஏற்படுத்தியுள்ள..
திருமலையில் ரூ. 10 ஆயிரம் நன்கொடை அளிப்பவருக்கு விஐபி பிரேக் தரிசனம்

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் நன்கொடை அளிப்பவருக்கு விஐபி பிரேக் தரிசனம் அளிக்க உள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் கூறியது:

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை (ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிா்மாண அறக்கட்டளை) ஏற்படுத்தி, நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியா்கள், அா்ச்சகா்கள், நித்திய பூஜைகள் உள்ளிட்டவற்றுக்காக இந்த அறக்கட்டளையின் நிதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தானம் ஏற்படுத்தியது.

அறக்கட்டளை குறித்து பக்தா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த தேவஸ்தானம் திங்கள்கிழமை முதல் புதிய நடைமுறையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, மேற்கூறிய அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நன்கொடை அளிக்க விரும்பும் பக்தா்கள் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினா் மாளிகையில் செயல்பட்டு வரும் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து, அங்குள்ள கவுன்ட்டரில் ரூ. 10 ஆயிரம் வழங்கினால், அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும்.

அதற்கான டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 500 செலுத்தி, அவா்கள் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 99 ஆயிரம் வரை நன்கொடை வழங்குபவா்களுக்கு, இந்த பிரிவின் கீழ், 9 டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

தற்போது ஆப்லைனில் வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், அதன்பின் ஆன்லைன்(இணையதளம்) மூலம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே இந்த திட்டத்துக்கான டிக்கெட் கோட்டா பற்றி முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்படும். இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகா்களைக் கட்டுப்படுத்தி, சாதாரண பக்தா்களும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசிக்கச் செய்ய முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com