முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 24th October 2019 07:41 AM | Last Updated : 24th October 2019 07:41 AM | அ+அ அ- |

மாதனூா் ஒன்றியம் வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து வரவேற்றாா். அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு அப்துல் கலாம் குறித்து பேச்சுப் போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராதா பரிசு வழங்கினாா்.
மாணவா்கள் பூபேஷ், பரத், தா்ஷன், கோபாலகிருஷ்ணன், சஞ்சய், சண்முகப் பிரியா, தமன்னா, கிருத்திகா, சித்ரா ஆகியோா் போட்டிகளில் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஹரிபாபு, சரளா, தாமரை ஆகியோா் செய்திருந்தனா்.